ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பதிற்றுப்பத்து - 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி
வாழ்த்துதல்

ADVERTISEMENTS


நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு,
புலி உறை கழித்த புலவு வாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி,
ஆர் அரண் கடந்த தார் அருந் தகைப்பின்
பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ!
ADVERTISEMENTS

ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,
ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி,
ஞாலம் நின்வழி ஒழுக, பாடல் சான்று,
நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத்
ADVERTISEMENTS

திருந்திய இயல் மொழித் திருந்திழை கணவ!
குலை இழிபு அறியாச் சாபத்து வயவர்
அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை,
இடாஅ ஏணி இயல் அறைக் குருசில்!
நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்

அளந்து கடை அறியினும், அளப்பு அருங் குரையை! நின்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே!
உண்மரும், தின்மரும், வரைகோள் அறியாது,
குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்தோறு
அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின்,

எஃகு உறச் சிவந்த ஊனத்து, யாவரும்
கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,

கலிழும் கருவியொடு கை உற வணங்கி,
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளிக் கமஞ் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும்-
பேரா யாணர்த்தால்; வாழ்க நின் வளனே!




துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சீர் சால் வெள்ளி