ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

பதிற்றுப்பத்து - 41. வென்றிச் சிறப்பு

ADVERTISEMENTS


புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப;
பண் அமை முழவும், பதலையும், பிறவும்,
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி,
காவில் தகைத்த துறை கூடு கலப் பையர்
ADVERTISEMENTS

கை வல் இளையர் கடவுள் பழிச்ச;
மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப்
பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன்
மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி,
ADVERTISEMENTS

சேஎர் உற்ற செல்படை மறவர்,
தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு,
வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர்

வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே:
தாவல் உய்யுமோ மற்றே-தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர்,

மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து,
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண்
வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து
கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக்

கடும் பரிப் புரவி ஊர்ந்த நின்,
படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே!




துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர் வீ வேங்கை